அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தனுஷ் இயக்கி நடித்த ஐம்பதாவது படமான ராயன் திரைக்கு வந்து வெற்றி பெற்ற நிலையில், அடுத்தபடியாக தனது உறவினர் மகனான பவிஷ் என்பவரை நாயகனாக நடிக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் பவிசுக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடிக்க அவர்களுடன் பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, தனுஷும் ஒரு கெஸ்ட் ரோலில் தோன்றுகிறார்.
இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரப்போகும் இந்த படத்தின் இசையமைப்பாளரான ஜி.வி .பிரகாஷ் குமார் தற்போது இப்படம் குறித்த ஒரு அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார். அதில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் இடம்பெற்றுள்ள ‛கோல்டன் ஸ்பேரோ' என்ற பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அது குறித்த போஸ்டர் ஒன்றையும் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளார்.