'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்து திரைக்கு வந்துள்ள படம் 'குபேரா'. இப்படத்தில் தனுசுடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கடந்த 20ம் தேதி திரைக்கு வந்த இந்த படம் முதல் நாளில் 30 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் தனுஷ் சிறப்பாக நடித்திருப்பதாக விமர்சனங்கள் வெளியாகி வருவதோடு, அவருக்கு தேசிய விருது கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் தான் நடித்த 'ஆடுகளம், அசுரன்' போன்ற படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார் தனுஷ். அதேபோன்று தான் தயாரித்த 'காக்கா முட்டை, விசாரணை' படங்களுக்காகவும் தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.