'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாள சினிமாவில் 'நடிப்பு ராட்சசி' என்ற பெயரை பெற்றவர் நிமிஷா சஜயன். அவர் நடித்த தி கிரேட் இண்டியன் கிச்சன், நாயாட்டு படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானார். 'சித்தா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அவர் தற்போது 'மிஷன் சேப்டர் ஒன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் இன்னும் வெளிவரவில்லை. இந்த நிலையில் அதர்வா ஜோடியாக 'டிஎன்ஏ' படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை 'டாடா' படத்தை தயாரித்த ஒலிம்பியா பிக்சர்ஸ் அம்பேத் குமார் தயாரிக்கிறார். மான்ஸ்டர், ஒரு நாள் கூத்து, பர்ஹானா படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்கிறார், படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. அதர்வாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முதல் பார்வை வெளியிடப்பட்டது. மற்ற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.