'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன் மற்றும் பலர் நடித்துள்ள 'டிஎன்ஏ' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், “பரியேறும் பெருமாள்' படத்தின் கதையை நான் முதலில் சொல்லியது அதர்வாவிடம்தான். நான் முரளி சாரோட பயங்கரமான ரசிகன். 'இதயமே இதயமே'ன்னு நமக்காக பாட்டுப் பாடி அழுத ஜீவன் அவர். ஒன் சைட் லவ் அதிகமா பண்ணவர்.
அவர் பையன் ஹீரோவாயிட்டாருன்னு சொன்ன உடனே, 'பாணா காத்தாடி' படம் வந்த உடனே 'பரியேறும் பெருமாள்' படத்துல வச்சி யோசிச்ச ஹீரோ அதர்வா தான். முரளி சார் பையன், நம்மள மாதிரி கருப்பா இருப்பாரு. கதைக்குப் பொருத்தமான இருப்பாருன்னு அவரை சந்திச்சி கதை சொன்னேன். ஆனா, அவரோட பிஸில அது நடக்கல. கதை சொன்ன அன்னைக்கு ரொம்ப பீல் பண்ணேன்.
முரளி சார் பையன் ஒத்துக்கலையே, யாரை வச்சி படம் பண்றது. நம்மளப் பார்த்து அவர் டைரக்டர்னு ஏத்துக்கலையேன்னு யாரு நம்பப் போறான்னு மனைவி கிட்ட கூட பீல் பண்ணேன். ஒரு நாள் அவர் கிட்ட சொல்லுவேன்னு யோசிச்சேன். அதுக்கப்புறம் இப்பதான் சந்திக்கிறேன். கிட்டத்தட்ட ஏழு வருஷமாச்சி,'' என்றார்.
அவருக்கு அடுத்து பேச வந்த அதர்வா, “மாரி சார், இங்க வந்து 'பாம்' போட்டுப் போயிட்டாரு. 'பரதேசி' படத்துக்குப் பிறகு நிறைய விஷயம் நடந்துட்டிருந்தது. நிறைய விஷயம் மண்டைக்குள்ள சுத்திட்டிருந்தது. ஒண்ணே ஒண்ணு சொல்றேன் சார். கடந்த பத்து வருஷத்துல நான் பார்த்த சிறந்த படங்கள்ல ஒண்ணு 'பரியேறும் பெருமாள்'. அதை மிஸ் பண்ணதுல வருத்தமில்ல. கதிர் ரொம்ப நல்லா பண்ணியிருந்தாரு. வேற ஒரு ஸ்கிரிப்ட் இருந்தா சொல்லுங்க, பண்ணுவோம்,” என்றார்.