பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், கதிர், ஆனந்தி, யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் 2018ல் வெளிவந்து வரவேற்பைப் பெற்ற படம் 'பரியேறும் பெருமாள்'. அப்படத்தை ஏழு வருடங்களுக்குப் பிறகு ஹிந்தியில் ரீமேக் செய்து 'தடக் 2' என்ற பெயரில் கடந்த வாரம் வெளியிட்டனர்.
ஷாஸியா இக்பால் இயக்கத்தில், சித்தாந்த் சதுர்வேதி, டிரிப்டி திம்ரி மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருந்தார். பிரபல இயக்குனர் கரண் ஜோஹர் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர். இந்தப் படம் முடிந்து கடந்த வருடமே வெளிவந்திருக்க வேண்டியது. வெளியீடு அறிவிக்கப்பட்டு சில முறை தள்ளி வைக்கப்பட்டது. சென்சார் பிரச்சனை வேறு படத்தைத் தாமதப்படுத்தியது. அனைத்தையும் தீர்த்து ஆகஸ்ட் 1ம் தேதி வெளியிட்டார்கள்.
ஆனால், விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இதுவரையில் 15 கோடி வசூலை மட்டுமே கடந்துள்ளதாம். கடந்த மாதம் வெளிவந்த 'சாயாரா' படத்தின் வெற்றிப் புயலில் 'தடக் 2' படமும் சிக்கிக் கொண்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். கடந்த வாரம் வெளியான 'சன் ஆப் சர்தார் 2' படமும் 40 கோடி வசூலையே நெருங்கியுள்ளது.