சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

'முண்டாசுப்பட்டி, ராட்சசன்' படங்களுக்குப் பிறகு இயக்குனர் ராம்குமார், விஷ்ணு விஷால் இணைந்துள்ள படம் 'இரண்டு வானம்'. இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
நேற்று படத்தின் நாயகன் விஷ்ணு விஷால், இயக்குனர் ராம்குமாருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “இரண்டு வானம்' கடைசி நாள் படப்பிடிப்பு, 150வது நாள் படப்பிடிப்பு. இந்தப் பயணத்தை நீங்களும் விரைவில் பெரிய திரையில் உணரப் போகிறீர்கள். தனித்துவமான சுவாரசியமான ஒன்றை மீண்டும் 'குக்' செய்துள்ளார் ராம்குமார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் கதை என்ன மாதிரியான கதை என்பது தெரியவில்லை. இருந்தாலும் அதற்காக 150 நாட்கள் படப்பிடிப்பு என்பது அதிக நாட்கள் என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். முன்னணி நடிகர், இயக்குனர், பெரிய பட்ஜெட் படம், சரித்திரப் படம் என்றால் அத்தனை நாட்கள் படப்பிடிப்பு நடத்தினாலும் பரவாயில்லை. இந்த கூட்டணிக்கு இத்தனை நாட்கள் படப்பிடிப்பு என்பது மிக அதிகமே என்பது பரவலான கருத்தாக உள்ளது.
சிக்கனமான படமெடுக்கும் சத்யஜோதி நிறுவனம் இவ்வளவு நாட்கள் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதே பெரிய விஷயம் என்கிறார்கள். படம் வந்த பிறகே அத்தனை நாட்கள் ஏன் என்ற விவரம் ரசிகர்களுக்கும் தெரிய வரும்.