தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் |
இயக்குனர் சுந்தர்.சி தமிழில் பல வருடங்களாக வெற்றி படங்களை தந்து முன்னனி இயக்குனராக வலம் வருகிறார். தற்போது 'மூக்குத்தி அம்மன்' இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் கார்த்தி புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பை இந்தாண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்க கார்த்தி கால்ஷீட் ஒதுக்கி இருந்தார். இதை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என தகவல் வெளியானது.
இந்த நிலையில் ஏற்கனவே கார்த்தி நடித்துள்ள ‛வா வாத்தியார், சர்தார் 2' ஆகிய படங்கள் இன்னும் டிஜிட்டல் வியாபாரம் நிறைவு பெறாமல் நிலுவையில் உள்ளதால் பிரின்ஸ் பிக்சர்ஸ் கார்த்தி, சுந்தர். சி படத்தை தயாரிப்பதில் இருந்து பின் வாங்கியுள்ளனர் என தமிழ் சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இதனால் இந்த படத்தை இருவருமே கைவிட்டு அடுத்த கட்டத்தை நோக்கி அவர்களின் பயணத்தை தொடர்கின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது.