பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! |

இயக்குனர் சுந்தர்.சி தற்போது நடிகை நயன்தாராவை வைத்து 'மூக்குத்தி அம்மன் 2' என்ற படத்தை இயக்கி வருகிறார். ரெஜினா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த படத்திற்கு பிறகு சுந்தர்.சி அடுத்து நடிகர் கார்த்தியுடன் இணைவதாக இருந்தது. ஒரு சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது.
இப்போது இதே கதையில் சுந்தர்.சி மீண்டும் விஷாலை கதாநாயகனாக வைத்து இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். இதன் மூலம் மீண்டும் மதகஜராஜா கூட்டணி இணைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பை நவம்பர் மாதத்தில் தொடங்க சுந்தர்.சி திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.
விஷால், சுந்தர் சி கூட்டணியில் உருவான ‛மதகஜராஜா' படம் 12 ஆண்டுகளுக்கு முன் உருவானது. பல்வேறு பிரச்னைகளால் முடங்கி இருந்த படம் இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகி இந்தாண்டின் முதல் வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.