இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

விஷ்ணுவிஷால் தம்பி ருத்ரா ஹீரோவாக அறிமுகம் ஆகும் 'ஓஹோ எந்தன் பேபி' படத்தில் காமெடி நடிகர் கருணாகரன், ஹீரோவின் சித்தப்பா கேரக்டரில் நடித்துள்ளார். 'கலகலப்பு' படத்தில் அறிமுகம் ஆன அவருக்கு இது சினிமாவில் 14வது ஆண்டு. இதற்கடுத்து இந்த பட இயக்குனர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்க, பிரபல விஞ்ஞானி ஜி.டி.நாயுடு வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் ஜி.டி.என் படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். ஜி.டி.நாயுடுவாக வருபவர் மாதவன்.
'ஓஹோ எந்தன் பேபி' படத்தில் குறி சொல்கிற காமெடி கேரக்டரில் வருகிறார். தம்பி அறிமுகம் ஆகும் படம் என்பதால் அண்ணன் விஷ்ணுவிஷாலும் நடித்து இருக்கிறார். கதைப்படி அவர் அவராகவே வருகிறார். அவரின் சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட பல டச்சிங் டயலாக்கும் படத்தில் இருக்கிறதாம். அவரின் மானேஜராக ரெடின் கிங்ஸ்லியும், ஹீரோ அப்பாவாக ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த விஜயசாரதியும், அம்மாவாக கஸ்துாரியும் நடித்து இருக்கிறார்கள்.
சற்றே மனநலம் பாதிக்கப்பட்ட கேரக்டரில் கீதா கைலாசமும் வருகிறார்கள். இயக்குனர் மிஷ்கினும் அவராகவே வருகிறார். அந்த காட்சியில் சினிமா தயாரிப்பாளராக நடித்து இருப்பவர் ஹீரோவின் நிஜ அப்பா. அவரும் ஒரு காலத்தில் நடிகராக இருந்தவர், சில படங்களில் சின்ன, சின்ன கேரக்டரில் நடித்தவர். இயக்குனர் கிருஷ்ணகுமார் ராமகுமார் கூட மணிரத்னம் தயாரிக்க, சுசிகணேசன் இயக்கிய 'பைவ்ஸ்டார்' படத்தில் ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர். பின்னர் விளம்பர பட இயக்குனராக மாறி, பல ஹிட்டான விளம்பர படங்களை இயக்கியவர்.