நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ராஜமவுலி இயக்கத்தில் கீரவாணி இசையமைப்பில் பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா, தமன்னா, நாசர், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஜுலை 10ம் தேதி வெளிவந்த திரைப்படம் 'பாகுபலி'.
'பாகுபலி - தி பிகினிங்' என முதல் பாகமாக வந்த இத்திரைப்படம் இந்திய சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தியத் திரையுலகத்தில் ஹிந்திப் படங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் ஒரு தெலுங்குப் படம் வட இந்திய மாநிலங்களிலும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடியது. சுமார் 600 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
சரித்திரக் கதையாக மகிழ்மதி சாம்ராஜ்யத்தின் கதையாக வெளிவந்த படத்தில் இடம் பெற்ற கதாபாத்திரப் பெயர்களும் ரசிகர்கள் மனதில் இடம் பெறும் அளவிற்கு மக்களைக் கவர்ந்தது. பாகுபலி, கட்டப்பா, பல்வால் தேவன், தேவசேனா, அவந்திகா, சிவகாமி தேவி, பிங்கலதேவன் உள்ளிட்ட பெயர்கள் இன்றும் மக்கள் மனதில் இருந்து நீங்காத பெயர்களாக உள்ளன.
தமிழ், தெலுங்கில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமாக இருந்த நட்சத்திரங்களான அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர், ரோகிணி ஆகியோர் நடித்ததும் இரண்டு மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெறக் காரணமாக இருந்தது. இப்படம் வெளிவந்த பின்பு இந்தியத் திரையுலகத்தில் நிறைய சரித்திர, இதிகாசத் திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. பான் இந்தியா என்பதை பிரபலப்படுத்தியதே இந்தப் படம்தான்.
ஒரு காலத்தில் தமிழ் வாசகர்களைப் பெரிதும் கவர்ந்த 'பொன்னியின் செல்வன்' நாவல் திரைப்படமாக வருவதற்கும் 'பாகுபலி' படம் ஒரு காரணமாக அமைந்தது.
'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகம் 'பாகுபலி - த கன்குலுஷன்' 2017ம் ஆண்டு வெளிவந்து முதல் பாகத்தை விடவும் பெரும் வெற்றியைப் பெற்றது.
'பாகுபலி' படக்குழுவினர் படத்தின் 10வது ஆண்டு நிறைவை மீண்டும் தங்களது அந்த நினைவுகளின் பதிவாக பதிவிட்டு வருகிறார்கள். 'பாகுபலி - தி பிகினிங்' தெலுங்குத் திரையுலகத்திற்கும் ஒரு புதிய ஆரம்பத்தைத் தந்தது.