ஜிவி பிரகாஷ் 100வது படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியீடு | தி ராஜா சாப் ரிலீஸ் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம் | கேரள மாநில விருது: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மம்முட்டி | ஒரே நேரத்தில் திரிஷ்யம் 3 மூன்று மொழிகளில் ரிலீஸா? : தெளிவாக குழப்பும் ஜீத்து ஜோசப் | 100 கோடி வசூலிக்குமா 'பாகுபலி தி எபிக்' | விஷால் மீது 'மகுடம்' முன்னாள் இயக்குனர் ரவி அரசு புகார் | மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசைப்படும் துருவ் | அஜித்துக்கு வில்லனாக நடிக்கலாமா? யோசிக்கும் விஜய்சேதுபதி | ராஷ்மிகாவின் 'மோதிர' ரகசியம்… | இந்தியன் 3 வருமா? வராதா? நாளை மறுநாள் தீர்வு கிடைக்குமா? |

ஒரு படம் ரீரிலீஸில் கூட சாதனை படைக்கிறது என்றால் அது 'பாகுபலி' படமாகத்தான் இருக்கும் என்று சொல்லும்படி ஆகிவிட்டது. ராஜமவுலி இயக்கத்தில் 2015ல் வெளிவந்த 'பாகுபலி 1', 2017ல் வெளிவந்த 'பாகுபலி 2' ஆகிய படங்களை இணைத்து, கொஞ்சம் காட்சிகளை வெட்டி 'பாகுபலி த எபிக்' என்ற பெயரில் கடந்த வாரம் வெளியிட்டார்கள்.
பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படம் இரண்டே நாட்களில் 30 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. முதல் நாள் வசூலாக சுமார் 19 கோடியும், இரண்டாவது நாளில் சுமார் 11 கோடியும் வசூலித்து 30 கோடியைக் கடந்துள்ளது. மூன்று மற்றும் நான்காவது நாட்களாக சனி, ஞாயிறு நாட்களில் இப்படம் மேலும் 20 கோடியை வசூலித்திருக்க வாய்ப்புள்ளது. அதனால் 50 கோடியைக் கடந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இதன் மூலம் இதற்கு முன்பு வெளிவந்த ரீரிலீஸ் படங்களின் சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. புதிய படங்களே ஓடாத போது ஒரு ரீரிலீஸ் படம் இப்படி வசூலிப்பது திரையுலகினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.