‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு | இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” | பான் இந்தியா அளவில் முன்னேறிச் சென்றது தனுஷ் மட்டுமே… | ராதிகா சரத்குமார் கொடுத்த கிறிஸ்துமஸ் 'லன்ச்' விருந்து | தள்ளிப் போகிறதா 'பராசக்தி' தெலுங்கு ரிலீஸ்? | நிலத்தில் உழவு செய்த சல்மான் கான், தோனி |

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில், மே 9, 1996ம் ஆண்டு வெளியான 'இந்தியன்' படம் எப்படிப்பட்ட வெற்றியை கொடுத்தது, எவ்வளவு வசூலை ஈட்டியது என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஆனால், 2024ம் ஆண்டு ஜூலை 12ம் தேதியில் வெளியான 'இந்தியன் 2' மோசமான விமர்சனங்களை சந்தித்தது. பல கோடி இழப்பை ஏற்படுத்தியது.
கமல், ஷங்கர் படங்களில் 'இந்தியன் 2' தோல்வி படமாகவும் அமைந்தது. விபத்து, பைனான்ஸ் பிரச்னை, கொரோனா என பல விஷயங்களில் படத்தை தயாரித்த லைகா நிறுவனத்தையும் 'இந்தியன் 2' படுத்தி எடுத்துவிட்டது.
இந்நிலையில் அந்த படம் வெளியான சில மாதங்களில் 'இந்தியன் 3'யை வெளியிட, மீதி படப்பிடிப்பை முடிக்க ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், ஷங்கரின் கண்டிசன், லைகாவின் பணப்பிரச்னை காரணமாக அந்த வேலைகள் நடக்கவில்லை. இந்தியன் 2வை விட, இந்தியன் 3யில்தான் பல நல்ல காட்சிகள் உள்ளன. அந்த படம் வெளியானால் ஹிட்டாகும் என படக்குழுவே சொன்னாலும் பல பிரச்னைகளால் ஓராண்டுக்கு மேலாக அந்த படம் அப்படியே நிற்கிறது.
நாளை மறுநாள் கமல்ஹாசன் பிறந்தநாள் என்பதால் அப்போது இந்தியன் 3 குறித்த அறிவிப்பு வருமா? புது போஸ்டர், டீசர் வெளியிடப்படுமா என்று இந்தியன் தாத்தா ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள்.