பேட் கேர்ள் பட டீசருக்கு சென்சார் வாங்கவில்லையா? | 100வது நாளில் அமரன் படம் | மாற்றி அறிவிக்கப்பட்ட மம்முட்டியின் பஷூக்கா ரிலீஸ் தேதி | 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரித்விராஜ் படத்தை இயக்கும் ஜீத்து ஜோசப் | கேரள கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகசைதன்யா | துல்கர் சல்மான் படம் மூலம் மீண்டும் டைரக்சனுக்கு திரும்பும் மின்னல் முரளி ஒளிப்பதிவாளர் | பிளாஷ்பேக் : மூன்றாம் பிறை படத்திற்காக ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கிடைக்காதது ஏன்? | பிளாஷ்பேக் : ஒரே பிரேமில் 5 சின்னப்பா : 80 வருடங்களுக்கு முன்பே தொழில்நுட்ப சாதனை | எப்படி இருந்த ஷிவானி இப்படி ஆகிட்டாங்களே | ரஞ்சனி சீரியலில் பவித்ரா ஜனனி என்ட்ரியா? |
மெளனகுரு, மகாமுனி படங்களை இயக்கிய சாந்தகுமார் தற்போது இயக்கி உள்ள படம் 'ரசவாதி : தி அல்கெமிஸ்ட்'. நாயகனாக அர்ஜூன் தாஸ், நாயகியாக தன்யா ரவிச்சந்திரன், ரேஷ்மா வெங்கடேஷ் மற்றும் ரம்யா சுப்ரமணியன் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், சுஜாதா, ரிஷிகாந்த் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். வருகிற 10ம் தேதி வெளிவருகிறது. சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார்.
படம் குறித்து இயக்குனர் சாந்தகுமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : 'மௌனகுரு' படத்திற்கு பிறகு ‛மகாமுனி' இயக்க சிறிய இடைவெளி இருந்தது. ஆனால் இந்த படத்திற்கு இடைவெளி எதுவும் இல்லை. கொரோனா காலம் வந்ததால் சற்று தாமதமாகி விட்டது. இனி இந்த இடைவெளி இருக்காது. ரசவாதம் என்பது உலோக மாற்றம். அதுவே மனிதனின் மூளைக்கும் பொருந்தும். அதுதான் படத்தின் கதை.
அலோபதி டாக்டர்களை போன்றே பல இளைஞர்கள் சித்த வைத்தியம் படித்துவிட்டு டாக்டர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதிகம் அறியப்படாதவர்களாக இருக்கிறார்கள். அதனால் தான் இந்த படத்தின் நாயகனை ஒரு இளம் சித்த வைத்திய டாக்டராக உருவாக்கினேன்.
ரசவாதியில் எனது முந்தைய படத்தின் தரம் இருக்கும் ஆனால் அவற்றின் கதை, களம் இவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கும். இது மூன்றாவது ஒரு அனுபவத்தை தரும். எல்லா அம்சங்களும் நிறைந்த படமாக இருக்கும். நடிகர்கள், தொழில்நுட்ப குழுவை சேர்ந்தவர்கள், எல்லாருமே தங்கள் சிறந்த உழைப்பை கொடுத்துள்ளனர் என்றார்.