'இந்தியன் 3' படத்திற்கு கெடுவைத்த ஷங்கர்! | குந்தவையை வீட்டுக்குள்ளேயே குந்த வைக்கிறது நல்லது! - பார்த்திபன் | ஹர்பஜன் சிங்கின் இரண்டாவது தமிழ் படம் குறித்து தகவல் இதோ! | 15 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'ஆரண்ய காண்டம்' | உறியடி விஜய்குமார் நடிக்கும் 'அறிவு' | பெண்களின் உணர்வை சொல்லும் 'மயிலா': மகளிர் தினத்தில் டீசர் வெளியீடு | ஏப்.,3ல் ரிலீசாகும் பரத் நடிக்கும் 'காளிதாஸ் 2' | கென் கருணாஸின் 'யூத்' டிரைலர் வெளியீடு | சிரஞ்சீவி மனைவி திரும்பத் திரும்ப கேட்கும் இளையராஜா - சிரஞ்சீவி பாடல் | தயாரிப்பாளரிடம் கெஞ்சிய நாயகி |

மௌனகுரு, மகாமுனி படங்களை இயக்கிய சாந்தகுமார் தற்போது தயாரித்து, இயக்கி உள்ள படம் 'ரசவாதி'. இதில் அர்ஜூன்தாஸ், தன்யா ரவிச்சந்திரன், ரேஷ்மா வெங்கடேஷ், ரம்யா சுப்ரமணியம், ஜி.எம்.சுந்தர் உள்பட பலர் நடித்துள்ளனர். சரவணன், சிவகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர், எஸ்.தமன் இசை அமைத்துள்ளார். படம் வருகிற 10ம் தேதி வெளிவருகிறது.
படம் பற்றி சாந்தகுமார் கூறியதாவது: இந்த படம் எனது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். கொடைக்கானலில் வாழும் இளம் சித்த வைத்தியர் ஒருவருக்கு ஒரு பிரச்னை வருகிறது. அதனை அவன் தனக்கிருக்கும் சித்த வைத்திய அறிவை கொண்டு எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் கதை. ஐடி வேலையை விட்டுவிட்டு மலைப்பகுதிக்கு வரும் ஒரு பெண்ணை அவன் சந்திப்பதும் அதன் காரணமாக வரும் பிரச்னைகளும்தான் திரைக்கதை. ரசவாதம் என்பது ஒரு உலோகத்தை இன்னொரு உலோகமாக மாற்றுவது. இந்த படத்தில் நாயகன் ஒரு காலத்தை இன்னொரு காலமாக மாற்றுகிறான்.
முழு படமும் கொடைக்கானலில் நடக்கிறது. இளமையும், அதே நேரத்தில் பக்குவமும் நிறைந்த ஒரு இளைஞர் படத்திற்கு தேவைப்பட்டார் அதனால் அர்ஜூன் தாஸை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறேன். தன்யா ரவிச்சந்திரனும், ரேஷ்மா வெங்கடேசும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ரம்யா சுப்ரமணியம் இதுவரை நடிக்காத ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். என்றார்.




