பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

கடந்த ஆண்டில் இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்து வெளியான படம் ' ரசவாதி' .இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த அளவிற்கு வசூல் ரீதியாக பெரிதளவில் வெற்றி படமாக அமையவில்லை.
தற்போது இந்த படத்திற்காக அர்ஜுன் தாஸிற்கு 'தாதா சாகேப் பால்கே' விருது அறிவித்துள்ளனர். இந்த படத்துக்காக அர்ஜுன் தாஸ் பெறும் 3வது விருது இதுவாகும். இது குறித்து செய்தியை அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் சாந்த குமார், "ரசவாதி திரைப்படத்தில் சதாசிவம் பாத்திரத்துக்காக தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுகிறார் நடிகர் அர்ஜுன் தாஸ். தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா 2025ல் பதிவு செய்யப்பட்ட 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இருந்து ரசவாதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ரசவாதி படத்திற்காக 3வது விருது பெறும் அர்ஜுன் தாஸுக்கு வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.
ரசவாதி படத்தின் ஒலிப் பொறியாளர் தபாஸ் நாயக், 9 உலக திரைப்படங்களைத் தாண்டி சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதைப் பெறுகிறார். மேலும் 5 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது ரசவாதி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.




