சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மலையாள நடிகர் மோகன்லால் பெற்றார். ‛இப்படியொரு விருது கிடைக்கும் என கனவு கூட கண்டதில்லை' என நெகழ்ச்சி உடன் தெரிவித்தார்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லால். 360க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 65 வயதை கடந்த போதிலும் இன்றைக்கும் பல இளம் நடிகர்களுக்கு நிகராக தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருவதோடு, வசூலிலும் பல புதிய சாதனைகளை படைத்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது இயக்குனர், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.
மலையாள சினிமா தாண்டி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிறமொழிகளிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். 50 ஆண்டுகளுக்காக மேலாக சினிமாவில் பயணித்து வருகிறார். இந்திய சினிமாவுக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக மத்திய அரசு நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ(2001), பத்மபூஷன்(2019) ஆகிய விருதுகளை வழங்கி கவுரவித்தது.
இந்நிலையில் இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை கடந்தவாரம் மத்திய அரசு அறிவித்தது. இன்று(செப்., 23) அந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.

கனவிலும் நினைக்கவில்லை
விழாவில் பேசிய மோகன்லால், "கனவு நனவாகவில்லை, இது அதைவிட பெரியது. இது ஒரு மேஜிக் போன்றது மற்றும் புனிதமானது. மலையாளத் திரைப்படத் துறையின் பிரதிநிதியாக, இந்த தேசிய அங்கீகாரத்தைப் பெற்ற மிக இளையவராகவும், மாநிலத்தில் இருந்து இரண்டாவது நபராகவும் இருப்பது எனக்கு பணிவை அளிக்கிறது. இந்த தருணம் எனக்கு மட்டுமல்ல. இது முழு மலையாளத் திரைப்பட சமூகத்திற்கும் உரியது. இந்த விருதை நமது துறையின் மரபு, படைப்பாற்றல் மற்றும் உறுதியின் கூட்டாக நான் கருதுகிறேன். மத்திய அரசிடமிருந்து இந்த செய்தியை முதலில் பெற்றபோது, இந்த கவுரவத்தால் மட்டுமல்ல, நமது திரைப்பட மரபின் குரலை முன்னெடுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்கியத்தால் மிகவும் நெகிழ்ந்தேன். இது விதியின் மென்மையான கரம் என்று நம்புகிறேன். மலையாள திரைப்படத்தை அதன் பார்வை மற்றும் கலைத்திறனால் வடிவமைத்த அனைவரின் சார்பாக இந்த விருதை ஏற்க என்னை அனுமதிக்கிறது. உண்மையைச் சொல்வதென்றால், இந்த தருணத்தை நான் ஒருபோதும் கனவு கூட கண்டதில்லை..." என்றார்.
நடிப்பை தவிர வேற எதுவும் தெரியாது
71வது தேசிய திரைப்பட விருது பெறும் முன் செய்தியாளர்களை சந்தித்தார் மோகன்லால். அப்போது செய்தியாளர் ஒருவர் மோகன்லாலிடம், 'ஒரு நடிகருக்கு கிடைக்கும் உயரிய விருதை பெறுகிறீர்கள். இதைத்தாண்டி ஒரு நடிகர் சாதிக்க வேண்டியது எதுவும் இல்லை, இனி எதற்காக நடிப்பை தொடர்கிறீர்கள்?' எனக் கேட்டார். இதற்கு, ''ஐயோ அப்படியா? இனிமே நான் என்ன செய்வேன்? எனக்கு நடிப்பை தவிர வேறு எதுவும் தெரியாதே...'' என கிண்டலாக பதிலளித்தார் மோகன்லால்.