சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

பிரபுதேவா, வடிவேலு, விவேக் நடித்த 'மனதை திருடி விட்டாய்' மற்றும் 'ஒரு பொண்ணு ஒரு பையன்' படங்களை இயக்கியவர் நாராயணமூர்த்தி (59). 'நந்தினி, ராசாத்தி, ஜிமிக்கி கம்மல், அன்பே வா, மருமகளே வா' போன்ற டிவி சீரியல்களையும் இயக்கியவர். நெஞ்சுவலி காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி, நேற்று இரவு காலமானார்.
இவருக்கு அம்சவேணி என்ற மனைவியும், லோகேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவர் வந்தவுடன் வெள்ளிக்கிழமை பம்மலில் உள்ள அவர் வீட்டில் இறுதி சடங்குகள் நடக்கின்றன.
தமிழ் சினிமாவில் பல சூப்பர்ஹிட் காமெடிகளுக்கு டிராக் எழுதியவர் நாராயணமூர்த்தி. குறிப்பாக, அவர் இயக்கிய மனதை திருடிவிட்டாய் காமெடி சீன்களும், அந்த வசனங்களும் இன்றும் பிரபலம். அந்த படத்தில் இடம் பெற்ற காமெடி சீன்கள வடிவேலுக்கு ஏகப்பட்ட படங்களை கொண்டு வந்தது. அந்த காமெடி சீன்கள் பின்னணியில் பல மீம்ஸ் வந்துள்ளன.
வடிவேலு மட்டுமல்ல, விவேக்கும் அந்த பட காமெடியில் கலக்கியிருப்பார். சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில், டிவி சீரியலுக்குள் நுழைந்து பல வெற்றிகளை பெற்றவர் நாராயணமூர்த்தி. சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர், நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைந்து சில நாட்களே ஆன நிலையில், பிரபல காமெடி இயக்குனரும் மறைந்தது தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.