'கைதி 2'க்கு முன்பாக உருவாகும் 'மார்ஷல்' | ‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? |
விஜய் டிவி பிரபலங்களான வினோத் பாபு - சிந்து தம்பதியினர் தங்களுக்கு குழந்தை பிறக்க போகும் செய்தியை இண்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளனர்.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ் பெற்ற வினோத் பாபு, சீரியலில் என்ட்ரி கொடுத்து அடுத்தடுத்து பல சீரியல்களில் கமிட்டாகி நடித்து வந்தார். வினோத் மற்றும் அவரது மனைவி சிந்து விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னதிரை முதல் சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். வினோத் பாபு தற்போது காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருவதுடன், தென்றல் வந்து என்னைத் தொடும் தொடரில் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.
இந்நிலையில் அவரது மனைவி சிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களுக்கு குழந்தை பிறக்கப்போகும் செய்தியை பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.