'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விஜயகுமாரின் கலை குடும்பத்து வாரிசுகளில் ஒருவர்தான் சிந்து. அதாவது விஜயகுமாரின் மனைவி மஞ்சுளாவின் சகோதரி மகள். 1990-ஆம் ஆண்டு வெளிவந்த 'இணைந்த கைகள்' என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அதன் பிறகு பட்டிக்காட்டுத் தம்பி என்ற படத்தில் ராம்கிக்கு ஜோடியாக நடித்திருந்தார். பரம்பரை, ஊர்க் குருவி, நம்ம வீட்டு கல்யாணம், அன்பே அன்பே உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்களில் வாய்ப்புக் குறையத் தொடங்கியதும் சின்னத்திரை தொடர்களில் நடித்தார். கோகுலம் வீடு, எங்கள் குடும்பம், தோழிகள், ஆனந்தம், மெட்டி ஒலி, ஆகிய தொடர்கள் அவர் நடித்ததில் முக்கியமானவை. 1995ம் ஆண்டு கன்னட நடிகர் ரகுவீர் என்பவரைத் திருமணம் செய்தார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து செய்துவிட்டார். இவர்களுக்கு ஸ்ரேயா என்ற ஒரு மகள் உள்ளார்.
2005ம் ஆண்டு சுனாமி நிதி திரட்டும் ஊர்வலத்தில் சின்னத்திரை நடிகர், நடிகையர்களுடன் கலந்து கொண்டார். வெகு தூரம் ஊர்வலமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அப்போது அவருக்கு வயது 33.
மக்களுக்கான பணியின்போது உயிரை பறிகொடுத்த சிந்துவின் தியாகம் பற்றி யாருமே கண்டுகொள்ளாததுதான் மிகப்பெரிய சோகம்.