''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ரஞ்சித் இயக்கி, நடித்துள்ள படம் 'கவுண்டம்பாளையம்'. அலிபா, அனிஷ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பழனிசாமி தயாரித்துள்ளர், விஜி சங்கர் இசை அமைத்துள்ளார். திருஞானசம்பந்தம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் ஆணவ கொலை மற்றும் நாடக காதலை மையப்படுத்தி உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்தே படம் குறித்த சலசலப்பு நிலவி வந்தது. படம் கடந்த ஜூலை 5ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திரைப்படத்தை திரையிட்டால் திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும் திரையரங்கை சேதப்படுத்துவோம் என்று சிலர் மிரட்டுவதாகக் கூறி படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து ரஞ்சித் போலீசில் புகார் அளித்தார். நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் படத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் கவுண்டம்பாளையம் படம் வருகிற 9ம் தேதி வெளியிடப்படுவதாக ரஞ்சித் கூறியுள்ளார். சுதந்திரப் போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் 219வது நினைவு நாளையொட்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ரஞ்சித் நிருபர்களிடம் கூறியதாவது:
நாடக காதலால் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து, நான் இயக்கி நடித்த 'கவுண்டம்பாளையம்' படம் பல்வேறு இடையூறுகளுக்கு பிறகு வரும் 9ம் தேதி திரையரங்கில் வெளியிடப்பட உள்ளது. நாடக காதல் என்பதே ஒரு நடிப்பு. சைக்கிள், கார், பைக், வைத்திருப்பவர்களை பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களாக தவறாக புரிந்து கொண்டு காதலர்கள் தவறாக தேர்வு செய்கின்றனர். காதலர்கள் நல்ல காதலை தேர்ந்தெடுக்க வேண்டும். என்பதை சொல்லும் படத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும். இந்த படம் எந்த சமூகத்தினரின் மனதும் புண்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.