''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
நீண்டநாள் தயாரிப்பில் இருந்த பிரசாந்த் நடித்த 'அந்தகன்' படம் வருகிற 9ம் தேதி வெளிவருகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து புரமோசன் செய்து வருகிறார் பிரசாந்த். ஏற்கெனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள தனது ரசிகர்களுக்கு ஹெல்மெட் வழங்கி, ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஹெல்மெட் அணியாமல் பைக்கில் அமர்ந்தபடி பேட்டி கொடுத்ததால் அவருக்கு போக்குவரத்து போலீசார் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதனை தனது தங்கள் டுவிட்டரிலும் வெளியிட்டனர்.
கோவையில் நடந்த 'அந்தகன்' பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரசாந்த் அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது “அந்தகன் திரைப்படம் பார்வையற்ற பியானோ கலைஞர் பற்றிய இசை சார்ந்த படம். விநியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் ரீமேக் படம் இல்லை, ரீமேட் படம். 110 சதவீதம் தமிழ் படம் பார்க்கும் அனுபவத்தை கொடுக்கும். 400 திரையரங்குகள் வரை வெளியாக உள்ளது.
ஹெல்மெட் அணியாததால் எனக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறித்து கேட்கிறார்கள். கடந்த ஓராண்டு காலமாக ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறேன். எனக்கு அபராதம் விதிக்கப்பட்டதன் மூலம் ஹெல்மெட் அணிவது குறித்த முக்கியத்துவம் தற்போது வைரலாகி வருகிறது” என்றார்.