10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

ரியாலிட்டி டிவி ஷோக்களில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் ஒருவர் தொகுத்து வழங்கப் போகிறார் என்ற அறிவிப்பு 2017ல் வந்த போது பலரும் ஆச்சரியப்பட்டார்கள். அப்படி ஒரு ஷோவாக 'பிக் பாஸ்' நிகழ்ச்சி இருந்தது. தொகுப்பாளராக கமல்ஹாசன் வந்ததும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு திரைப்படத்திற்கு வாங்கும் சம்பளத்திற்குக் குறைவில்லாமல் கமல் வாங்கினார் என்ற தகவலும் உண்டு. கடந்த 7 சீசன்களாக அந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கினார்.
அடுத்து 8வது சீசன் இன்னும் சில வாரங்களில் ஆரம்பமாக வேண்டும். அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது ஆரம்பமாகி உள்ளதாகத் தெரிகிறது. இந்த வருடமும் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதில் மாற்றம் வரலாம் என்றும் சொல்கிறார்கள்.
தற்போது 'தக் லைப்' படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் கமல். அடுத்து 'இந்தியன் 3' படத்திற்கான சில நாள் வேலைகளும் இருக்கும் என்கிறார்கள். அடுத்து 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசன் படம் முழுவதும் வரப் போகிறாராம். அதற்கான படப்பிடிப்புகளிலும் அவர் கலந்து கொள்ள வேண்டும். எனவே, தன்னால் 8வது சீசனை தொகுத்து வழங்க முடியாது என டிவி நிர்வாகத்திடமும், ஷோ தயாரிப்பாளர்களிடமும் சொல்லிவிட்டார் என தகவல் கசிந்துள்ளது. இருப்பினும் கமல்ஹாசனை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும் என கடுமையாக முயற்சித்து வருகிறார்களாம். பிக் பாஸ் வீட்டிற்குள் கமல் நுழைவாரா, நுழையாமல் போவாரா என்பது விரைவில் தெரிய வரும்.