சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

ஓடிடி வந்த பிறகு உலக சினிமாக்கள் நமது வீட்டுக்குள்ளேயே வர ஆரம்பித்துவிட்டன. அதுபோல நமது சினிமாக்களும் வெளிநாடுகளில் உள்ளவர்களின் வீட்டுக்குள்ளும் சென்று சேர்கின்றன.
ஹாலிவுட், கொரியன் அதிகமாகப் பார்க்கும் நமது ரசிகர்களைப் போல, இந்தியத் திரைப்படங்களை அதிகமாகப் பார்க்கும் ரசிகர்களும் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். 'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் வெளிநாடுகளில் ஏற்படுத்திய தாக்கம் இதற்கு முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது.
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், நட்ராஜ், அனுராக் காஷ்யப் மற்றும் பலர் நடிப்பில் ஜூன் மாதம் வெளிவந்து வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் 100 கோடி வசூலைக் கடந்த படம் 'மகாராஜா'. இப்படம் ஓடிடி தளத்தில் தமிழில் மட்டுமல்லாது, ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகி உள்ளது.
மற்ற இந்திய மொழிகளில் பெற்ற வரவேற்பை விடவும் வெளிநாடுகளில் உள்ள ரசிகர்களை இந்தப் படம் கவர்ந்துள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று. சமூக வலைத்தளங்களில் இந்தப் படத்தைப் பாராட்டி பல வெளிநாட்டு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அதில் வெளிநாட்டு ரசிகை ஒருவர் “ஒரு அப்பாவின் அன்பு… யார் வேண்டுமானாலும் அப்பா ஆகலாம். ஆனால், அதற்குத் தகுதியா ஒருவர் மட்டும்தான் இருப்பாங்க,” என்று நெகிழ்ச்சியாக அவர் குறிப்பிட்டுள்ளது பலரையும் லைக் செய்ய வைத்துள்ளது.