'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகை மஞ்சு வாரியர். தனது கணவரான நடிகர் திலீப்பை பிரிந்த பிறகு முன்பை விட அதிக படங்களில் நடித்து வருகிறார். தனது ரீ என்ட்ரியில் பல மொழிகளில் கலக்கி வருகிறார். தனுஷ் நடித்த 'அசுரன்' படத்தின் மூலமாக தமிழுக்கு வந்தார். பிறகு அஜித்துடன் 'துணிவு' படத்தில் நடித்தார். தற்போது ரஜினியுடன் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர 'மிஸ்டர் எக்ஸ்' படத்திலும் நடிக்கிறார்.
தமிழில் நயன்தாராவை 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று மீடியாக்கள் சில குறிப்பிட்டு எழுத அதுவே அவருக்கு பட்டமாகி விட்டது. தனது படங்களின் டைட்டில் மற்றும் விளம்பரங்களில் லேடி சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிடும்படி அவர் கூறி வருவதாகவும் கூறப்படுகிறது. இதே போன்று சமீப காலமாக மலையாள மீடியாக்கள் மஞ்சு வாரியரை 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று குறிபிடத் தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து தனது வருத்த்தை தெரிவித்துள்ளார் மஞ்சு வாரியர். இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் “என்னை 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று சொல்கின்றனர். அந்த வார்த்தையைக் கேட்கும்போது, தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன். என்னை இப்படி அழைப்பதால், சமூக வலைத்தளங்களில் தேவையற்ற விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பட்டம் எனக்கு தேவையில்லை. கடைசி வரைக்கும் எனது ரசிகர்களின் அன்பு மட்டுமே போதுமானது” என்று கூறியுள்ளார்.