சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளரான விஜய சாரதி நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரையில் தோன்றவுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
90-களின் காலக்கட்டத்தில் தொலைக்காட்சிகள் தொழில்நுட்ப தரத்திலும், எண்ணிக்கையிலும் இப்போது இருப்பது போல் கிடையாது. அதேசமயம் ஒரு தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் வெற்றியில் அதிகபட்ச பெருமை தொகுப்பாளர்களையே சேரும். தொகுப்பாளர்களும் தங்கள் திறமை ஒன்றையே வைத்து நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி வந்தனர். அந்நிகழ்ச்சிகளின் வரிசையில் முன்னணி டிவி ஒன்றில் நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சியை நினைவு கூறும் எவரும் விஜே சாரதியை மறக்கவே முடியாது.
பல்வேறு இடங்களுக்கு சென்று அந்த இடத்தை பற்றிய எக்ஸ்குளூஸிவ் தகவல்களை சுவாரசியமாக, பின்னால் திரும்பாமல் நடந்து கொண்டே சொல்வது அவரது தனிப்பட்ட ஸ்டைல். இதற்காகவே இந்தியா மட்டுமல்லாமல் பிறநாடுகளிலும் அவருக்கு ரசிகர்கள் ஏராளம். இவ்வாறாக அந்த காலகட்டத்தின் டாப் விஜேக்களில் ஒருவராக வலம் வந்த விஜய சாரதி, தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இலங்கை தமிழ் சேனல் ஒன்றில் மீண்டும் தொகுப்பாளராக களமிறங்குகிறார்.
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த விஜய் சாரதி பவளக்கொடி என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். ஆனால், படங்களில் பெரிதாக அவரால் ஜொலிக்க முடியவில்லை. அதேசமயம் சின்னத்திரையில் சித்தி, கோலங்கள், விக்கிரமாதித்யன் மற்றும் விடாது கருப்பு என பல ஹிட் சீரியல்களில் நடித்தார். பின்னர் ஒரு காலக்கட்டத்தில் எந்த திரையிலும் தோன்றாமல் காணமல் போய்விட்டார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் கம்பேக் கொடுத்திருந்த அவர் மீண்டும் தொகுப்பாளராக களமிறங்குவதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர், மேலும் விஜய் சாரதிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.




