Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

3 ஆண்டு மண வாழ்க்கை கசந்தது: விவாகரத்து கேட்கிறார் தொகுப்பாளினி டிடி

20 டிச, 2017 - 11:45 IST
எழுத்தின் அளவு:
Divyadarshini-alice-DD-files-for-Divorce

பிரபல சின்னத்திரை நட்சத்திர தொகுப்பாளினி டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. காபி வித் டிடி மூலம் புகழ்பெற்றவர். பிரமாண்ட நட்சத்திர கலை விழாக்கள், விருது வழங்கும் விழாக்களை தொகுத்து வழங்கியவர். முன்னணி திரை நட்சத்திரங்களுக்கு தோழியாக இருப்பவர். சமீபகாலமாக திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

டிடி தனது பால்ய காலத்து நண்பரும், காதலருமான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தமிழ் திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்திச் சென்றது. திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக டிடி சினிமாவில் நடிப்பதை அவர் கணவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தம் அடைந்த டிடி சில காலம் சின்னத்திரையில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

இப்போது மீண்டும் அன்புடன் டிடி நிகழ்ச்சி மூலம் வந்திருக்கிறார். முதலில் தனுஷ் இயக்கிய பவர்பாண்டி படத்தில் நடித்தவர் இப்போது மணிரத்னம் மற்றும் ராஜீவ் மேனன் இயக்கும் படங்களில் நடிக்கிறார். இந்த நிலையில் பாடகியும் ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா தனது டுவிட்டரில் டிடி தொடர்பாக ஒரு படத்தை வெளியிட்டார். இந்த படங்கள் கணவன் மனைவிக்குள் மேலும் பிரிவை உண்டாக்கியதாக கூறப்படுகிறது. இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் திவ்யதர்ஷினியும், அவரது கணவர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இது சின்னத்திரை பெரிய திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது! சந்திரிகா ரவிதமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது! ... குணசித்திர நடிகராக வலம் வரும் மசாலா வியாபாரி குணசித்திர நடிகராக வலம் வரும் மசாலா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

subbu - QLD,ஆஸ்திரேலியா
12 ஜன, 2018 - 09:29 Report Abuse
subbu நலுங்கு வைக்கிறதில ஆரம்பிச்சு டிவேர்ஸ் வாங்கற வரிக்கும் கொண்டுவந்துருவாங்க.
Rate this:
GAYATHRIE KARTHIK - George Town,மலேஷியா
21 டிச, 2017 - 08:33 Report Abuse
GAYATHRIE KARTHIK கல்யாணம் பன்ரேப்போ என்ன ஆர்ப்பாட்டம் ? பத்தாதுக்கு விஜய் டிவி பண்ண ஆர்ப்பாட்டம் .....யப்பப்பா, உங்க கேவலமா கல்யாணத்துக்கும் விளம்பரத்துக்கும் பண்ண செலவை கணக்கு பண்ணா எத்தனையோ ஏழை குழந்தைகள் வயிறும் மனசும் நெறஞ்சு இருக்கும்....தூ துட்டேரிகளா .....
Rate this:
21 டிச, 2017 - 04:11 Report Abuse
AravamuthanSenthilkumar இவளுக்கெல்லாம் கல்யாணமே தேவயில்ல...எவரிதிங் வேஸ்ட்...
Rate this:
Melur Seenu - Chennai,இந்தியா
20 டிச, 2017 - 14:22 Report Abuse
Melur Seenu பணம் அந்தஸ்து எப்படி எல்லாம் வாழ்க்கையே மாத்துது. இப்படி பிரியறதுக்கா ஆடம்பரம் கல்யாணம் பண்ணனும். நீங்க பிரபலம் ஆனதே எங்கோளோட ரேடிங்கினால. அப்பாவி பையனோட லைப் போச்சே. திரு ஸ்ரீகாந்த் தம்பி நல்ல ஏழை பொண்ண பார்த்து லைப் ரன் பானு. இதல்லாம் முதல்லேயே யோசிச்சு இருக்கணும். உன்னை பெத்தவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்க.
Rate this:
20 டிச, 2017 - 14:19 Report Abuse
GiridharanArt Idhukum Dhanush dhan karanama.?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film ONGALA PODANUM SIR
  • ஒங்கள போடணும் சார்
  • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
  • நடிகை : சனுஜா சோமநாத்
  • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
  Tamil New Film Kadhal Munnetra Kazhagam
  Tamil New Film Charlie Chaplin 2
  • சார்லி சாப்ளின் 2
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
  Tamil New Film Kanchana 3
  • காஞ்சனா 3
  • நடிகர் : ராகவா லாரன்ஸ்
  • நடிகை : வேதிகா ,ஓவியா
  • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in