ஆண்கள் மட்டுமே நடித்துள்ள 'ஆகக் கடவன': நாளை ரிலீஸ் | மோகன்லாலின் வாழ்க்கை கதை புத்தகம்: டிசம்பரில் வெளியீடு | டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயனுக்கு சம்மன்? | அட்லிக்கு டாக்டர் பட்டம்: சத்யபாமா பல்கலைக்கழகம் வழங்குகிறது | பிளாஷ்பேக்: விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஈடுகட்டிய என்.எஸ்.கிருஷ்ணன் | பிளாஷ்பேக்: விஜய் படத்தை நிராகரித்த அஜித் | ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் |
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், ஜனவரி மாதம் அங்கிருந்து சென்னை திரும்பிய படக்குழு அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பை தொடங்கவில்லை. இந்த நிலையில் அஜித் நடிப்பில் ‛குட் பேட் அக்லி' என்ற படத்தின் வேலைகளை தொடங்கிவிட்ட ஆதிக் ரவிச்சந்திரன், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை வருகிற மே 10ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அதன்பிறகு மீண்டும் அஜர்பைஜான் நாட்டுக்கு சென்று விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம் அஜித். மேலும், விடாமுயற்சி படம் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரும் நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு குட் பேட் அக்லி திரைக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.