'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சினிமா பிரபலங்கள் பலரும் கார்கள் மீது தீராத ஆசை வைத்துள்ளவர்கள். உலகில் உள்ள பிரபலமான பிராண்ட் கார்களை வாங்குவதில்தான் அவர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஒரே ஒருவர் பயணிக்க ஒரு கார் போதுமே என நாம் நினைப்போம். ஆனால், சினிமா பிரபலங்கள் நான்கைந்து விலை உயர்ந்த கார்களை வாங்கி சும்மாவே நிறுத்தி வைத்திருப்பார்கள்.
பிரபல நடிகையான சமந்தா வைத்துள்ள கார்கள் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அவரிடம் மொத்தம் 6 கார்கள் உள்ளதாம். மூன்று கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 எஎம்ஜி கார் ஒன்று, இரண்டேகால் கோடி மதிப்புள்ள லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் கார் ஒன்று, ஒன்றேமுக்கால் கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யு 7 சீரிஸ் கார் ஒன்று, ஒன்றரை கோடி மதிப்புள்ள போர்ஷ் கேமேன் ஜிடிஎஸ் கார் ஒன்று, 87 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆடி கியு 7 கார் ஒன்று, 70 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஜாகுவார் எக்ஸ்எப் கார் ஒன்று ஆகியவை அவரிடம் உள்ளது.
ஐதராபாத்தில் ஒரு வீடும், மும்பையில் ஒரு வீடும் வைத்துள்ளாராம் சமந்தா. ஒரு படத்திற்கு அதிகபட்சமாக 4 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 110 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது.