'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'ராமம் ராகவம்'. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படம் தந்தை, மகன் உறவின் பின்னணியில் உருவாகி உள்ளது. தந்தையாக சமுத்திரக்கனி, மகனாக தன்ராஜ் நடித்துள்ளனர். இதன் டீசர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் பாலா, சமுத்திரகனி பற்றி பேசியதாவது: சமுத்திரகனியோட மாபெரும் ரசிகனாக நான் இங்கு வந்திருக்கிறேன். நடிப்பிலும் தேசிய விருது வாங்கி, இயக்கத்திலும் நிறைய படங்கள் பண்ணி தன்னை நிரூபித்துக் காட்டிவிட்டார். அதைத் தாண்டி அவருடைய கடுமையான உழைப்புக்கு ரசிகன்.
ஒரு நாளைக்கு அரை மணிநேரம் கூட வீணடிக்க மாட்டார். அதே போல் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் அவருக்கு இருக்கின்ற மனது பெரியது. அதை நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன். அவர் நடிக்கின்ற படமாகட்டும் அல்லது அவருக்கு பிடித்த அப்பா மாதிரியான படமாகட்டும் அதை ஊக்குவிப்பதில் அவருக்கு பெரிய மனது இருக்கிறது. இது போன்ற குணம் மட்டும் அவரிடம் தொடர்ந்து இருந்தால் அவரால் இன்னும் ஆயிரம் பேர் பிழைப்பார்கள். அதை அவர் விட்டுவிடக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.