சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛விடாமுயற்சி'. ஆக் ஷன் கலந்த அதிரடி படமாக உருவாகி உள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். இந்தபடம் உலகம் முழுக்க நாளை(பிப்., 6) வெளியாகிறது. இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது.
பொதுவாக முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாகும் போது சிறப்பு காட்சிகள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி வருகிறது. குறிப்பாக ‛துணிவு' படத்திற்கு முன்பு வரை அதிகாலை காட்சிகள் எல்லாம் நடந்தன. ஆனால் அந்த படத்தின் சிறப்பு காட்சியில் ரசிகர் ஒருவர் உயிரிழந்ததால் அதிகாலை காட்சி ரத்தானது.
இதனால் தமிழகத்தில் காலை 9 மணிக்கு தான் முதல்காட்சி திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் விடாமுயற்சி படத்திற்கு படம் வெளியாகும் நாளை ஒருநாள் மட்டும் 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை இந்த காட்சிகளை நடத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடாமுயற்சி படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 900 முதல் 1000 தியேட்டர்களில் வெளியாகும் என தெரிகிறது.