நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

'ஜெயிலர்' படத்தில் 'காவாலா' பாடலுக்கு நடனமாடி அசத்திய நடிகை தமன்னா, ஹிந்தியில் 'ஸ்ட்ரீ 2' படத்தில் ஆஜ் கி ராட் என்ற பாடலிலும் நடனமாடியிருந்தார். தற்போது அசோக் தேஜா இயக்கத்தில் 'ஒடேலா 2' படத்திலும் தமன்னா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் நடிகை தமன்னா பேசுகையில், ''நான் கேரவனில் இருந்தபோது, மோசமான ஒரு நிகழ்வை எதிர்கொண்டேன். அதனால் மிகவும் வருத்தமடைந்தேன். என் கண்கள் குளமாகின. படப்பிடிப்புக்காக மேக்அப் உடன் மஸ்காரா (கண் மை) போட்டிருந்ததால், அந்த சமயத்தில் நான் அழவில்லை. இது ஒரு உணர்வு மட்டுமே, அதனை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அதன்பிறகு, சோகத்தில் இருந்து மகிழ்ச்சியான உணர்வுக்கு மாற்றிக்கொண்டேன்'' என்றார்.
இந்த மோசமான நிகழ்வு எந்த படப்பிடிப்பின்போது என்றோ, என்ன நடந்தது என்றோ தமன்னா குறிப்பிடவில்லை.