மூன்று வருடமாக நான் சிங்கிள் தான் ; ரிலேஷன்ஷிப் குறித்து மனம் திறந்த பார்வதி | விடாமுயற்சி படத்திற்கு ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி | ''கேரவனில் நடந்த சம்பவம்...'': மனமுடைந்த நிகழ்வை பகிர்ந்த தமன்னா | ரிலீசுக்கு தயாராகும் டேனியல் பாலாஜியின் கடைசி படம் | கதை நாயகன் ஆனார் ராமர் | 'விடாமுயற்சி'யில் ஒரு வாரத்தில் எனது கேரக்டரை மாற்றினார் இயக்குனர் : ரெஜினா | ஒத்த ஓட்டு முத்தையாவை வெற்றி பெற வைப்பது உங்கள் கடமை: கவுண்டமணி | பிளாஷ்பேக் : கங்கை அமரன் இசை சாம்ராஜ்யம் நடத்திய 'வாழ்வே மாயம்' | கும்பமேளாவில் புனித நீராடிய சம்யுக்தா, ஸ்ரீநிதி ஷெட்டி | பிளாஷ்பேக் : புஷ்பலதா, ஏவி.எம்.ராஜன் கிறிஸ்தவ போதகர்கள் ஆனது எப்படி? |
மலையாள நடிகை பார்வதி நல்ல கதாபாத்திரங்களையும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். அதனாலேயே கடந்த 15 வருடங்களுக்கு மேலான திரையுலக பயணத்தில் குறைவான படங்களிலேயே நடித்துள்ளார். கடந்த வருடம் அவரது நடிப்பில் மலையாளத்தில் வெளியான உள்ளொழுக்கு மற்றும் தமிழில் வெளியான 'தங்கலான்' என இரண்டு படங்களும் அவருக்கு நல்ல பாராட்டுக்களை பெற்றுக் கொடுத்தது. இவருக்குப்பின் வந்த நடிகைகள் எல்லாம் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்ட நிலையில் இதுவரை எந்த கிசுகிசுவிலும் சிக்காத பார்வதி ரிலேஷன்ஷிப் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி உள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, நான் இதுவரை சிலருடன் ரொமான்டிக் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளேன். ஒருவரை காதலிப்பதற்கு முன்பு அவரைப் பற்றி நன்கு தெரிந்து கொள்வதற்கும் அவருடன் நமது வாழ்க்கை முழுவதும் பயணிக்க முடியுமா என்று தெரிந்து கொள்வதற்கும் இந்த டேட்டிங் நிச்சயம் அவசியம் தான். அதுவும் நம் சினிமா துறையை சேர்ந்தவராகவே இருந்து விட்டால் இன்னும் சந்தோசம். அப்படி சிலருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து சில காரணங்களால் தவிர்க்க முடியாமல் பிரிய வேண்டிய சூழல் பலமுறை ஏற்பட்டது.
அதிலும் ஒரு மிகச்சிறந்த மனிதருடன் ஒருமுறை நான் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். எனது மோசமான உணவுப் பழக்கங்களால் அந்த ரிலேஷன்ஷிப் கட்டானது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் ஒருமுறை எங்களுக்குள் சிறிய வாக்குவாதம் ஏற்பட்ட போது அந்த சமயத்தில் நான் மிகப்பெரிய பசியில் இருந்தேன். சட்டென கோபப்பட்டு விடுபவளும் கூட. அதனால் தான் அந்த ரிலேஷன்ஷிப் முறிந்தது. அதன் பிறகு ஒரு முறை அவரை மீண்டும் சந்தித்தபோது நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன். பொதுவாக இப்படி பழகுபவர்களிடம் ரிலேஷன்ஷிப் முடிந்துவிட்டாலும் கூட அவர்களிடமிருந்து ஒரேயடியாக விலகுவதுமில்லை நல்ல நட்புடன் எப்போது பார்த்தாலும் பேசி வருகிறேன். ஆனால் கடந்த மூன்று வருடங்களாக நான் சிங்கிளாக தான் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.