ஹிந்தி பட வசூலில் நம்பர் 1 சாதனை புரிந்த 'ஸ்திரீ 2' | தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை | ரஜினிகாந்த் - அனிருத் கூட்டணியின் 4வது இசை வெளியீடு | மழைக்காலத்தில் சிக்குகிறதா 'கங்குவா'? | நாளை 'வேட்டையன்' விழா : கதை சொல்வாரா ரஜினிகாந்த் ? | விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' | சிவகார்த்திகேயனை தவிப்பில் விட்ட ஏஆர் முருகதாஸ் | அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் |
‛சீதா ராமம்' திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாக்கூர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது: காதல் போன்ற நெருக்கமான காட்சிகளில் நடிக்க எனக்கு வசதியாக இல்லை. நான் பயப்படுவேன். அதை எனது பெற்றோரும் ஏற்கவில்லை. நான் ஒரு படத்தில் நடிக்க விரும்பிய போது, அதில் முத்தக் காட்சி சம்பந்தப்பட்டிருந்ததால் நான் விலக வேண்டியிருந்தது. ஒரு நடிகராக, நீங்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும், ஏனென்றால் சில நேரங்களில் அது படத்திற்கு தேவையாக இருக்கும்.
உங்களுக்கு வசதியாக இல்லை என்றால், நீங்கள் அதைப் பற்றி பேசலாம். முத்தக்காட்சிகளில் நடிக்காததால் நான் பல திரைப்படங்களை தவறவிட்டேன். இந்தவிதமான காட்சிகளில் நடிக்க நான் பயப்படுவேன். இதனால் அந்த காட்சி வேண்டாம் என்று சொல்வேன். ஆனால் எத்தனை நாட்கள் இவ்வாறு வேண்டாம் என்று சொல்ல முடியும்?. இவ்வாறு அவர் கூறினார்.