தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் மிருணாள் தாக்கூர், தான் சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில் அளித்த ஒரு பேட்டியில், ‛‛நடிகை பிபாஷா பாசு ஆண்மைதனமான தோற்றம் கொண்டவர்'' என்று ஒரு கருத்து வெளியிட்டிருந்தார். அப்போது அவர் சொன்ன இந்த கருத்தை மற்ற நடிகைகளை இழிவாக பேசுவது மலிவான மனநிலையின் அடையாளம் என்று பலரும் விமர்சனம் செய்தார்கள்.
அப்போது பிபாஷா பாசு, நல்ல ஆரோக்கியத்திற்காக உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று மிருணாள் தாக்கூருக்கு மறைமுகமாக பதில் கூறியிருந்தார். அப்படி மிருணாள் தாக்கூர் அளித்த பேட்டியின் வீடியோ பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் அதற்கு ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் மிருணாள் தாக்கூர். அதில், ‛‛எனது டீன்ஏஜ் வயதில் நான் அளித்த பேட்டி இது. அந்த சமயத்தில் பல முட்டாள்தனமான மற்றும் முதிர்ச்சியற்ற கருத்துக்களை நான் வெளியிட்டேன். அதற்காக வருந்துகிறேன். யாரையும் உடல் ரீதியாக அவமானப்படுத்துவது என் நோக்கமல்ல. ஒரு பேட்டியில் நான் விளையாட்டாக பேசியது மிகைப்படுத்தப்பட்டுவிட்டது. வார்த்தைகளை கவனமாக பேசியிருக்க வேண்டும். காலப்போக்கில், வெவ்வேறு விதமான அழகை மதிக்க கற்றுக் கொண்டேன்'' என்று ஒரு விளக்கம் கொடுத்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.