எப்போதான் முடியும் ரவிமோகன் - ஆர்த்தி சண்டை? | 'தக்லைப்' படத்தில் போலீசாக வருகிறாரா திரிஷா? | நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி | கே.ஜி.எப் தயாரிப்பாளருடன் இணைந்த ஹிருத்திக் ரோஷன் | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி | 'பூ' சசி படத்தில் லப்பர் பந்து சுவாசிகா | 'தக் லைப்' கூடவே வரும் மூன்று படங்கள் : தியேட்டர்கள் கிடைக்குமா ? | சுந்தர்.சியிடம் பார்ட்டி கேட்கும் நண்பர்கள் | உண்மையாக இருக்கிறேன் : தீபிகா படுகோனே | பவன்கல்யாண் பாடிய தமிழ் பாடல் |
பாலிவுட் நடிகர் சஹில் கான் 'தி லயன் புக் ஆப்' என்ற பந்தய செயலி வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இது மகாதேவ் பந்தய செயலி நெட்வொர்க்கின் ஒரு பகுதியாகும். இந்த வழக்கில் மும்பை போலீசின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அவரிடம் விசாரணை நடத்தியது. மேலும், சாஹில் கான் 'தி லோட்டஸ் புக் ஆப்'-ல் பங்குதாரராகவும் உள்ளார். அந்த செயலியின் விளம்பரங்களிலும் அவர் நடித்துள்ளார்.
மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் சாஹில் கானின் ஜாமின் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த சாஹில் கானை சுமார் 40 மணிநேரமாக தேடிய மும்பை போலீஸ் சைபர் செல் சிறப்பு புலனாய்வுக் குழு இன்று கைது செய்தது. சத்தீஸ்கரில் உள்ள ஜக்தல்பூரில் பிடிபட்ட அவர் மீண்டும் மும்பைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.