'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து வரும் அனிருத், தெலுங்கு, ஹிந்தி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் அவரது 12வது படத்திற்கு இசையமைக்க கமிட்டாகி இருக்கிறார் அனிருத். கவுதம் என்பவர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. மேலும், இந்த படம் கைதி படத்தைப்போன்று விறுவிறுப்பான கதையில் உருவாவதால், கதையின் வேகத்தை குறைத்து விடும் என்பதற்காக பாடல்களே வைக்கவில்லையாம். அதனால் படத்துக்கு படம் துள்ளலான பாடல்களை கொடுத்து வரும் அனிருத் இந்த படத்திற்கு பின்னணி இசை மட்டுமே அமைக்க போகிறார்.