சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! |
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ஜூனியர் சூப்பர் ஸ்டார். 5 வயது முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து, இதன் சீசன் 2 கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்தது. நடிகை குஷ்பு, இயக்குனர் கே.பாக்யராஜ், ஆகியோர் நடுவர்களாக பணியாற்றி வருகிறார்கள். தீபக், அர்ச்சனா, கீர்த்தி ஆகியோர் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. இதன் இறுதிச்சுற்று நாளை நடக்கிறது. இறுதிச்சுற்றில் பங்கேற்க 12 சிறுவர், சிறுமியர் தேர்வாகி இருக்கிறார்கள். இவர்களுக்கு 6 சுற்று போட்டிகள் நடத்தப்பட்டு திறமையானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் முதல் இடத்தை பிடிப்பவருக்கு ஜூனியர் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்கப்படும். அதோடு முதல் மூன்று இடத்தை பிடிப்பவர்களுக்கு லட்சக்கணக்கில் பரிசுகளும் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சி வருகிற 24ந் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகிறது.