சூரி படத்தின் பட்ஜெட் 75 கோடியா? | பத்து கோடியை தொட்ட சிறை | ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா? | ரஜினியை இயக்கும் ‛டான்' இயக்குனர் : 2027 பொங்கலுக்கு ரிலீஸ் | 'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை |

பாலிவுட் நடிகர் சஹில் கான் 'தி லயன் புக் ஆப்' என்ற பந்தய செயலி வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இது மகாதேவ் பந்தய செயலி நெட்வொர்க்கின் ஒரு பகுதியாகும். இந்த வழக்கில் மும்பை போலீசின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அவரிடம் விசாரணை நடத்தியது. மேலும், சாஹில் கான் 'தி லோட்டஸ் புக் ஆப்'-ல் பங்குதாரராகவும் உள்ளார். அந்த செயலியின் விளம்பரங்களிலும் அவர் நடித்துள்ளார்.
மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் சாஹில் கானின் ஜாமின் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த சாஹில் கானை சுமார் 40 மணிநேரமாக தேடிய மும்பை போலீஸ் சைபர் செல் சிறப்பு புலனாய்வுக் குழு இன்று கைது செய்தது. சத்தீஸ்கரில் உள்ள ஜக்தல்பூரில் பிடிபட்ட அவர் மீண்டும் மும்பைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.