ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மிஸ் கோயம்புத்தூர், மிஸ்.கேரளா டைட்டில்களை வென்றவர் பூஜா. ஒரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்த எஸ்.எஸ்.மியூசிக்கின் நட்சத்திர தொகுப்பாளர். அந்த சேனல் நிறுத்தப்பட்ட பிறகு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் காதலில் சொதப்புவது எப்படி உள்பட பல படங்களில் ஹீரோயின் தோழி, ஹீரோவின் சகோதரி என நடிக்க ஆரம்பித்தார். மலையாளம் தெலுங்கு மொழிகளிலும் நடித்தார். பின்னர் திடீரென சின்னத்திரையை விட்டு விலகினார். திருமணமாகி செட்டிலானார்.
தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இரண்டு தெலுங்கு படங்களிலும், ஒரு தமிழ் படத்திலும் சத்தமே இல்லாமல் ஹீரோயினாக நடித்திருக்கிறார். விரைவில் அந்த படங்கள் பற்றிய அறிவிப்புகள் வர இருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் சின்னத்திரையிலும் தொகுப்பாளினியாக வலம் வர முடிவு செய்திருக்கிறார்.