பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
2014 நவம்பரில் இருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் கல்யாணம் முதல் காதல் வரை. இது இந்தியில் வெளியான ஏ ஹைய் மொஹபதென் -என்ற சீரியலின் ரீமேக் ஆகும். இந்தியைப்போலவே தமிழ் டிவி நேயர்கள் மத்தியிலும் இந்த சீரியல் பிரபலமாகி வருகிறது.
மேலும் இந்த தொடரில் இந்தி பதிப்பில் நாயகியாக நடித்தவர் திவ்யங்கா திரிபாதி. இவருக்கு கடந்த ஜூலை 8-ந்தேதி மும்பையில் திருமணம் நடைபெற்றது. தனது காதலரான இந்தி சீரியல் நடிகர் விவேக் தஹியா என்பவரை கைபிடித்துள்ளார் திவ்யங்கா திரிபாதி. இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், இன்று (ஜூலை 10) மும்பையில் நடைபெறும் இவர்களது திருமண வரவேற்பில் இந்தி சின்னத்திரை நடிகர் -நடிகைகள் கலந்து கொண்டு தம்பதிகளான விவேக் தஹியா- திவ்யங்கா திரிபாதி காதல் ஜோடியை வாழ்த்துகிறார்கள்.