ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
சின்னத்திரையில் சில ஹிட் தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தர்ஷனா. இவர் ஐபிஎல் தொடர் போட்டிகளில் அண்மையில் நடைபெற்ற சிஎஸ்கே மேட்ச்சை காண நேரில் சென்றுள்ளார். மேட்ச்சில் சிஎஸ்கே தோற்றாலும், தனது க்யூட்டான ரியாக்ஷன்களால் பலகோடி சிஎஸ்கே ரசிகர்களின் உள்ளத்தை வென்றுவிட்ட தர்ஷனாவை மீம்ஸ் கிரியேட்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து பேட்டியளித்துள்ள நடிகை தர்ஷனா, 'நேற்று சிஎஸ்கே அணி எப்படியாவது மேட்ச் ஜெயிக்க வேண்டும் என்று நம்பிக்கையோடு இருந்தேன். சீட்டில் உட்காரவே முடியாத அளவுக்கு மேட்ச் விறுவிறுப்பாக சென்றது. அப்போது நான் கொடுத்த ரியாக்ஷன்கள் இணையத்தில் இவ்வளவு வைரலாகும் என்று நான் நினைக்கவேயில்லை. ரசிகர்கள் எனக்கு இவ்வளவு ஆதரவு தருவார்கள் என்று நான் நினைக்கவேயில்லை' என்று கூறியுள்ளார்.