ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஜீ தமிழ் தொலைக்காட்சி தனது நட்சத்திரங்களை கொண்டு தமிழ் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் ரசிகர்களை நேரில் சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது. இதற்கு ஜீ தமிழ் கொண்டாட்டம் என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். ரசிகர்கள் முன் கலை நிகழ்ச்சிகள் நடத்தி அவர்களை நேரில் சந்தித்து உரையாடுவது இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். இதுவரை வேலூர், கோவை, தஞ்சை ஆகிய நகரங்களில் நடந்து முடிந்துள்ளது. இன்று (ஜூலை 5) மதுரையில் ஜீ தமிழ் கொண்டாட்டம் நடந்து வருகிறது. மதுரை வித்யா நகரில் உள்ள மதுரை கல்லூரியில் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் நடிகைள் சிம்ரன், காயத்ரி, சங்கவி, நடிகர் எஸ்.பி.பி சரண் உள்ளிட் சீ தமிழ் தொலைக்காட்சியின் சீரியல் நடிகர் நடிகைகள், தொகுப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இதனைத் தொடர்ந்து திருச்சி, நெல்லை, சேலம் நகரங்களில் நடக்க இருக்கிறது. இந்த நிகழ்சிகள் தொகுக்கப்பட்டு பின்னர் ஒளிபரப்பாக இருக்கிறது.