ரஜினிக்கு சங்கடம் தரக்கூடாது என நினைத்து டைட்டிலை மாற்றிய முருகதாஸ் | இயக்குனர் ஷங்கரின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை | புரமோஷன் செய்தாலும் ரசிகர்களே வெற்றியை தீர்மானிக்கிறார்கள்: அர்ஜூன் கபூர் | சாவா படத்திற்கு வரி விலக்கு அறிவித்த மத்திய பிரதேச முதல்வர் | 25 நிமிடம் விளம்பரம் போட்டு சோதித்த திரையரங்கம் : ஒரு லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம் | ஜுனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு துவங்கியது | சுந்தரா டிராவல்ஸ் 2ம் பாகத்தின் அப்டேட் | தமிழ் சினிமாவில் 21 ஆண்டுகளை நிறைவு செய்த பிரியாமணி | புன்னகை பூவே சீரியலை விட்டு விலகிய சைத்ரா | இயக்குனராக ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா தனுஷ்? |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர் லாஸ்லியா. தொடர்ந்து தமிழில் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள லாஸ்லியா, அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன் வாழ்வில் நிகழ்ந்த மிக சோகமான நிகழ்வு பற்றி நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
தனது அப்பாவை மிகவும் நேசித்த லாஸ்லியா, ''அப்பாவின் மறைவு நாங்கள் எதிர்பார்க்காதது. கடைசியாக நான் எனது அப்பாவை பார்த்தது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான். அதன்பின் அவரை நான் பிணமாக தான் பார்த்தேன். கன்னடாவுக்கு சென்ற எனது அப்பா அங்கேயே இறந்துவிட்டார். அவரது உடலை நேரடியாக இலங்கைக்கு தான் கொண்டு வந்தார்கள். அதுவும் பல போராட்டங்களுக்கு பிறகு தான் சில நாட்கள் கழித்து தான் கொண்டு வந்தார்கள். இரவு நேரத்தில் வந்ததால் போலீஸார் எனது அப்பாவின் உடலை எங்களிடம் தர மறுத்துவிட்டனர்.
இரவு 2 மணிக்கு தனி ஒரு பெண்ணாக போலீஸிடம் போராடினேன். தனியாக இருப்பதால் பாவம் பார்த்து அப்பாவின் உடலை என்னிடம் தர சம்மதித்தனர். அதன்பிறகு தான் சொந்த ஊருக்கு கொண்டு சென்று காரியம் செய்தோம். அந்த கஷ்டம் எல்லாம் யாருக்கும் வரக்கூடாது'' என்று தந்தையை நினைத்து மிகவும் மனம் வருந்தி அந்த பேட்டியில் லாஸ்லியா பேசியுள்ளார்.