‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

இலங்கையில் பிறந்த வளர்ந்த லாஸ்லியா, செய்தி வாசிப்பளாராக மீடியாவில் நுழைந்தார். பார்ப்பதற்கு அழகிய தோற்றம் கொண்ட லாஸ்லியா தமிழ்நாட்டு ரசிகர்களிடமும் பிரபலமாக அவருக்கு விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டினுள் இருந்த லாஸ்லியாவின் இயல்பான குணம் மேலும் பல ரசிகர்களை கவர்ந்தது. தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அடியெடுத்து வைத்திருக்கும் லாஸ்லியா, 'ப்ரண்ட்ஷிப்', 'கூகுள் குட்டப்பா' ஆகிய படங்களில் நடித்துள்ளார். அடுத்து இரண்டு படங்களில் கமிட்டாகி உள்ளார். இன்ஸ்டாவில் அவரை ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். மாடலிங்கிலும் இறங்கி அடித்து வரும் லாஸ்லியா புடவையில் க்யூட்டாக இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.