வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் | தனுஷ் மருமகன் நடிக்கும் அடுத்த படம்: தாத்தா கஸ்தூரிராஜா தொடங்கி வைத்தார் | சித்திரம் பேசுதடி ஹீரோயினுக்கு சாருனு பெயர் வைத்தது ஏன்? மிஷ்கின் | மீண்டும் துப்பாக்கி பயிற்சியில் இறங்கிய அஜித் | ஆபாச படத்தைக் காட்டி 2 கோடி கேட்டு மிரட்டிய நடிகை |

'பிக் பாஸ்' சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் இலங்கைத் தமிழ்ப் பெண்ணான லாஸ்லியா. இலங்கையில் உள்ள தமிழ் செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றியவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீசனில் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்ற போட்டியாளர்களில் ஒருவராக லாஸ்லியா இருந்தார். மேலும், அதே சீசனில் கலந்து கொண்ட சக போட்டியாளரான டிவி நடிகர் கவினைக் காதலித்ததால் அவர்கள் இருவரும் பரபரப்பாகப் பேசப்பட்டனர். நிகழ்ச்சியை விட்டு வெளியில் வந்ததும் அவர்கள் இருவரும் பிரிந்ததாகச் சொல்லப்பட்டது.
அதன்பின் லாஸ்லியா தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். “பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா” ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
பிக் பாஸ் சீசன் 1ன் போட்டியாளரும், நடிகருமான ஹரிஷ் கல்யாண் திருமண வரவேற்பு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பல பிக் பாஸ் போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். திருமண வரவேற்புக்கு லாஸ்லியா அணிந்து வந்து கிளாமரான மேலாடை பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அந்த ஆடையில் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்களையும் லாஸ்லியா தற்போது பதிவிட்டுள்ளார். இதுவரையில் இந்த அளவிற்கான கிளாமர் ஆடையில் லாஸ்லியா புகைப்படங்களைப் பதிவிட்டதில்லையே என ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.