இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? |
ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், கீர்த்தி சனோனன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஆதி புருஷ்'. இப்படம் 2023 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால், தற்போது படம் தள்ளிப் போகலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
மோஷன் கேப்சரிங் முறையில் உருவாக்கப்படும் இந்தப் படத்தின் டீசர் வெளிவந்ததும் சில பல சர்ச்சைகளை உருவாக்கியது. விஎப்எக்ஸ் மிக மோசமாக உள்ளது என்றும் கமெண்ட்டுகள் வந்தன. அதன் பிறகு படத்தின் டீசரை 3 டி வடிவில் மும்பை, ஐதராபாத் பத்திரிகையாளர்களுக்குப் போட்டுக் காட்டினர்.
இந்நிலையில் விஎப்எக்ஸ் காட்சிகளை உலகத் தரத்தில் உருவாக்கவும், சர்ச்சைகளை ஏற்படுத்திய சில விஷயங்களை சரி செய்யவும் படத்தைத் தள்ளி வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 2023 கோடை விடுமுறையில் படத்தை வெளியிடலாம் என யோசித்து வருகிறார்களாம்.
மேலும், பொங்கலுக்கு தமிழ், தெலுங்கில் பெரிய நடிகர்களின் படங்களும் வெளியாகிறது. 'ஆதி புருஷ்' படத்தை எந்தப் போட்டியும் இல்லாமல் தனித்து வெளியிட வேண்டும் என்பதும் ஒரு காரணமாக இருக்கும் என்கிறார்கள். புதிய வெளியீட்டுத் தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வரலாம் என்று பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.