நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? |
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த வருடம் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இது கன்னட திரையுலகம் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் அவர் மறைந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் அவருக்கு கர்நாடகாவின் மிகவும் உயர்ந்த விருதான கர்நாடக ரத்னா என்கிற விருது வழங்கும் விழா வரும் நவம்பர் 1ம் தேதி பெங்களூருவில் உள்ள விதான் சவுதாவில் நடக்க இருக்கிறது.
கர்நாடகாவில் இந்த வருடம் நடைபெறும் மிகப்பிரம்மாண்டமான விழாவாக இது இருக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். அதற்கேற்ப இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு தமிழ் திரையுலகில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் இருவக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இந்த விழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து விட்டார்கள் என்றும் கர்நாடக நிதியமைச்சர் அசோகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “முதலில் இந்த விழாவிற்கு வருவதற்கு ரஜினிகாந்த் தயங்கினாலும் பின்னர் சமீபத்தில் அவர் இந்த விழாவிற்கு வருகை தர சம்மதம் தெரிவித்துவிட்டார். அவர் கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்து அங்கேயே அரசு பேருந்திலும் பணியாற்றியவர். அதுமட்டுமல்ல நடிகர் ராஜ்குமார் குடும்பத்தின் மீது மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர். அதேபோல நடிகர் ஜூனியர் என்டிஆரின் அம்மா கர்நாடகாவை சேர்ந்தவர். அதனால் இவர்கள் இருவருமே இந்த விழாவில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதில் ஆச்சர்யம் ஏதுமில்லை” என்று கூறியுள்ளார்.