வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா | உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி | ஹைப்பர் லிங் ஜார்னரில் உருவாகும் 'தி ஒன்' | சலீம் குமார் இறுதி சடங்கில் யு டியூப்பர்கள் அட்டகாசம் : போலீஸ் எச்சரிக்கை | ஆர்த்தி ஜீவனாம்சத்திற்கு காலக்கெடு கேட்ட ரவி மோகன் வழக்கு தள்ளுபடி |

2022ம் ஆண்டு ஆரம்பமானது முதல், ஒவ்வொரு வாரத்திலும் நேரடி தமிழ்ப் படங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இந்த வருடத்தில் இதுவரையில் குறிப்பிடும் அளவில் நேரடி தமிழ்ப் படங்களான “எப்ஐஆர், வலிமை, எதற்கும் துணிந்தவன், செல்பி, பீஸ்ட், காத்து வாக்குல ரெண்டு காதல், டான், நெஞ்சுக்கு நீதி, விக்ரம்” ஆகிய படங்கள் சொல்லும் அளவிலான வெற்றியைப் பெற்றுள்ளன. அந்த நேரடி தமிழ்ப் படங்களோடு, டப்பிங் படங்களான 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' ஆகிய படங்களும் நல்ல வசூலைப் பெற்றுள்ளன.
தொடர்ந்து இடைவிடாமல் படங்கள் வெளிவந்து கொண்டிருந்த சூழ்நிலையில் இந்த வாரம் நேரடி தமிழ்ப் படங்களுக்கு சற்றே இடைவெளி வரும் எனத் தெரிகிறது. இந்த வார வெள்ளிக்கிழமை ஜுன் 10ம் தேதியன்று குறிப்பிடத்தக்க தமிழ்ப் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. மாறாக டப்பிங் படங்களான 'அடடே, சுந்தரா' மற்றும் '777 சார்லி' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
தெலுங்கில் தயாராகி தமிழில் டப்பிங் செய்யப்பட்டுள்ள படம் 'அடடே, சுந்தரா'. நானி, நஸ்ரியா, நதியா, ரோகிணி, அழகம் பெருமாள் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கன்னடத்தில் தயாராகி தமிழில் டப்பிங் ஆகி வரும் படம் 'ரரர சார்லி'. ரக்ஷித், சங்கீதா சிருங்கேரி, சார்லி என்ற நாய் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இந்த வாரம் இந்த இரண்டு டப்பிங் படங்களுக்கு இடையேதான் போட்டி நிலவப் போகிறது.