ரஜினி, கமல் இணையும் படம் : இன்று பிரமோ படப்பிடிப்பு | 2026ம் ஆண்டின் முதல் வெற்றி 25வது நாளில்… | வாய்ப்பை வீணாக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' | ஓடிடியில் கடுமையாக டிரோல் செய்யப்படும் 'தி ராஜா சாப்' | ஓடிடியில் வெளியாகும் பொங்கல், சங்கராந்தி படங்கள் | சூர்யாவின் 'கருப்பு': விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'டாக்சிக்' தெலுங்கு வியாபாரம் 120 கோடி உண்மையா? | வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் |

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். கடந்த 2014ம் ஆண்டு அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாளத்தில் சத்தியன் அந்திக்காடு இயக்கிய மகள் என்ற படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். இதையடுத்து தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதற்கும் தீவிர பட வேட்டையில் ஈடுபட்டுள்ளார் மீராஜாஸ்மின்.
இந்நிலையில், திருமணத்திற்கு முன்பு கிளாமருக்கு நோ சொல்லி நடித்து வந்த மீரா ஜாஸ்மின் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே கிரீன்கலர் உடை அணிந்து சமீபத்தில் ஒரு கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய மீரா ஜாஸ்மின், தற்போது இன்னும் உடல் இளைத்து ஸ்லிம்மாகி லோ நெக் உடையணிந்து எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அவை வைரலாகின.




