எந்த மாற்றமும் தெரியவில்லை : கீர்த்தி சுரேஷ் | ராம்சரணின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்! | வருகிற மார்ச் 24ம் தேதி நாகார்ஜுனா - அமலா தம்பதியின் மகன் அகில் திருமணம்! | இது சாமி விஷயம்- நறுக் பதில் கொடுத்த யோகி பாபு! | என்னை வியக்க வைத்த தனுஷ் - சேகர் கம்முலா! | 'நிறம் மாறும் உலகில்' படத்தில் 4 கதைகள் | பிளாஷ்பேக் : ஒரே ஹாலிவுட் படத்தை காப்பி அடித்து உருவான இரண்டு தமிழ் படங்கள் | பிளாஷ்பேக் : சொக்கலிங்கம் 'பாகவதர்' ஆனது இப்படித்தான் | சாய் பல்லவிக்கு கிடைத்த ஆசீர்வாதம்! | இந்தியா பசுமையை இழந்து விட்டதால் நியூசிலாந்தில் 'கண்ணப்பா'வை படமாக்கினோம் : விஷ்ணு மஞ்சு |
ஒரு காலத்தில் தமிழ், மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் மீரா ஜாஸ்மின். 'ரன், சண்டக்கோழி' படங்களில் அவரை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு அவருடைய துறுதுறு நடிப்பை ரசித்தவர்கள் பலர். முன்னணி கதாநாயகியாக இருந்த போது கொஞ்சம் கூட கிளாமர் காட்டாதவர் மீரா. 'நோ நோ' என மறுத்தவர். ஆனால், இப்போது சமூக வலைத்தளங்களில் அவருடைய கிளாமர் புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் 'ஆஹா' என சொல்லி வருகிறார்கள்.
2014ல் திருமணம் செய்து கொண்ட பிறகு ஒரு சில மலையாளப் படங்களில் மட்டும் நடித்தார். நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த 'மகள்' என்ற மலையாளத் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் வந்த மீரா தொடர்ந்து பலவிதமான கிளாமர் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார்.
இப்போது மீராவிற்கு எப்படியும் 40 வயதாவது ஆகியிருக்கும். இந்த வயதில் அவர் கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதில் அர்த்தமில்லை என திரையுலகிலேயே கிசுகிசுக்கிறார்கள். இளம் நடிகர்களுக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பில்லை. அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் வேண்டுமானால் நடிக்க அழைப்பார்கள். ஆனால், அதிலெல்லாம் மீரா நிச்சயம் நடிக்க மாட்டார் என்கிறார்கள். ஏதோ அவரது திருப்திக்காக இப்படி கிளாமர் புகைப்படங்களை பதிவிடுகிறாரோ என்றும் கேட்கிறார்கள். அது மீராவுக்கே வெளிச்சம்.